Saturday, November 6, 2010

79 : எம்.ஜி.ஆரின் துணிவும், தெளிவும்!

    ராணுவ நடவடிக்கை மூலமே தீர்வு என்கிற கோட்பாட்டில் நம்பிக்கை வைத்து
      ஜெயவர்த்தனா செயல்படுவதன் மூலம் இனி பேச்சுவார்த்தைகள் பயனளிக்காது என்பது
      உறுதியாயிற்று. இதன் காரணமாக தமிழர்கள் பகுதியில் பயம் தொற்றிக் கொண்டது.
      போராளிகள் இயக்கங்களில் களத்தில் நிற்பவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட
      விடுதலைப் புலிகள், ஈரோஸ் ஆகிய இரண்டு அமைப்புகளையும் பலப்படுத்துவது
      என்றும், தமிழக அரசின் நிலையை தெளிவுபடுத்துவது என்றும் எம்.ஜி.ஆர்.
      முடிவுக்கு வந்தார். விடுதலைப் புலிகளுக்கு 3 கோடி ரூபாயும், ஈரோஸ்
      அமைப்புக்கு ரூ.1 கோடி ரூபாயும் வழங்குவது என்றும் முடிவு செய்து
      அவ்வமைப்புகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை
      அங்கீகரிப்பது மட்டுமல்ல, அந்த அமைப்பிலுள்ள பெண் வீராங்கனைகளையும்
      சட்டமன்றத்தில் பாராட்டியது முக்கிய வரலாற்று நிகழ்வாகும். எந்தெந்த
      விஷயங்களை சட்டமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்பதைக் கிட்டத்தட்ட ஒருமணி
      நேரம் வரை ஆலோசித்து முடிவு செய்து, அவ் விளக்கத்தை முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.
      சார்பில், பண்ருட்டி ராமச்சந்திரன் அளிக்க உத்தரவிட்டார். தமிழக சட்டமன்றப்
      பேரவையில் 27.4.1987 அன்று பண்ருட்டி ராமச்சந்திரன் நிகழ்த்திய உரை வருமாறு:
      ""இலங்கைத் தமிழர்கள் பிரச்னை குறித்து இலங்கை அரசும் அவர்களோடு நெருங்கிய
      நண்பர்களும் அதை அறிந்தோ அறியாமலோ, அதேபோல இந்திய திருநாட்டிலேயுள்ள சில
      பத்திரிகைகளும், சில நேரங்களில் தொலைக்காட்சிகளும், வானொலிகளும் கூட சில
      சம்பவங்களைச் சரியான முறையில் நாட்டு மக்களின் கவனத்திற்குக் கொண்டு
      வருவதில்லை. ஆகவே, அந்த பனிப்படலத்தை நீக்கி, உண்மை நிலையை விளக்க வேண்டுவது
      இந்த அரசின் தலையாய கடமையாகும்.
      இலங்கை அரசை எடுத்துக்கொண்டால் கடந்த கால அனுபவம் என்னவென்றால், இன
      வெறியையும், மத வெறியையும், மொழி வெறியையும் மையமாக வைத்து செயல்படுகின்ற ஓர்
      அரசைத்தான் நாம் இலங்கையில் பார்க்கிறோம். இதற்கு ஆதாரங்களைத் தேடி அலைய
      வேண்டிய அவசியம் நிச்சயமாக இல்லை. சில தினங்களுக்கு முன் இலங்கை
      பாராளுமன்றத்தில் பேசிய அந்த நாட்டின் பிரதம அமைச்சர் பிரேமதாசா, அண்மையில்
      திருகோணமலையிலும், கொழும்புவிலும் நடந்து விட்ட வெடிகுண்டு சம்பவங்கள் பற்றி
      பேசினார். அவர் பேசியதில் தவறு இல்லை. ஆனால் அவர் பேசியபோது இலங்கை அரசினுடைய
      உண்மையான சொரூபம், (ட்ரு கலர்ஸ்) என்ன என்பதை நாமெல்லாம் தெளிவாகப் புரிந்து
      கொள்ளும் அளவுக்கு பேசியிருக்கிறார். அவர் பேசுகின்ற பொழுது சொன்னது:
      ‘‘ரட்ங்ய் ற்ட்ங் ப்ண்ஸ்ங்ள் ர்ச் ர்ன்ழ் ல்ங்ர்ல்ப்ங் ஹழ்ங் ண்ய்
      க்ஹய்ஞ்ங்ழ், ஜ்ங் ஹழ்ங் ய்ர்ற் ல்ழ்ங்ல்ஹழ்ங்க் ற்ர் ஞ்ர் ண்ய் ச்ர்ழ் ஹ
      ல்ர்ப்ண்ற்ண்ஸ்ரீஹப் ள்ர்ப்ன்ற்ண்ர்ய். எமது மக்கள் உயிருக்கு ஆபத்து என்றால்
      அரசியல் தீர்வுக்கு நாங்கள் தயாராக இல்லை'' இந்த "எமது மக்கள்' என்றால் யார்?
      இதுவரையில் ராணுவத்தினாலும், காவல் துறையினராலும் வடபுலத்திலேயும், கிழக்கு
      மாகாணத்திலேயும் கொல்லப்பட்ட தமிழர்கள் அல்ல. திருகோணமலையிலே, கொழும்புவிலே
      நடந்த வெடிகுண்டு சம்பவங்களின் விளைவாக சிங்களவர்கள் பாதிக்கப்பட்டார்கள்
      என்றவுடன் ஒரு நாட்டின் அரசு, அந்த அரசின் சார்பிலே பேசுகின்ற பிரதமர் என்ன
      சொல்லுகின்றார் என்றால், "எமது மக்கள்' என்று. "எமது மக்கள்' என்றால் யார்?
      எமது மக்கள் என்பது சிங்களவர்கள் என்றால் ஏனைய தமிழ் மக்கள் யார்? அவர்கள்
      அந்த நாட்டு மக்கள் அல்லவா? மண்ணின் மைந்தர்கள் அல்லவா?
      மேலும் அவர் இந்தியாவைப் பற்றிச் சொல்லும்பொழுது க்ஷங்ஸ்ரீஹன்ள்ங் ஜ்ங்
      ஜ்ஹய்ற் ச்ழ்ண்ங்ய்க்ள்ட்ண்ல் ஜ்ண்ற்ட் ஐய்க்ண்ஹ ஜ்ங் ஸ்ரீஹய்ய்ர்ற்
      க்ஷங்ற்ழ்ஹஹ் ர்ன்ழ் ல்ங்ர்ல்ப்ங்(இந்தியாவோடு நட்புறவு வேண்டுமென்பதற்காக
      எமது மக்களை நாங்கள் கைவிடமாட்டோம்) என்று கூறுகிறார். ஆகவே அவர்
      சிங்களவர்களின் பிரதமராக இருக்கிறாரே தவிர, சிங்களவர்களின் பிரதிநிதியாக
      இருக்கிறாரே தவிர, இலங்கையிலே உள்ள அனைத்து மக்களினுடைய பிரதமராக இருக்கிறாரா
      என்பதை நாம் தயவுசெய்து எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறோம். எப்பொழுது
      ஒற்றுமை வரும்? எல்லோரும் ஒன்று என்கின்ற எண்ணம் ஏற்படுகின்றபொழுது ஒற்றுமை
      வரும். அவர்களே ஒன்றாக நினைக்காமல் தமிழ் மக்களை வேறாக நினைக்கின்ற பொழுது
      நீங்களும் நானும் சேர்ந்தா இலங்கையில் ஒற்றுமையை உருவாக்கப் போகிறோம்? இதை
      இலங்கையிலே இருக்கின்ற சிங்கள மக்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அந்த
      மக்களின் சார்பிலே நடைபெறுகிற ஒரு அரசின் சார்பில் ஜெயவர்த்தனா இன்றைக்குப்
      பேசுகிறபொழுது ரங் ஹழ்ங் ச்ர்ழ் ல்ங்ஹஸ்ரீங். ரங் ஹழ்ங் ச்ர்ழ் ற்ஹப்ந்ள்
      (நாங்கள் சமாதானத்தை விரும்புகிறோம். பேச்சுவார்த்தைக்குத் தயாராய்
      இருக்கிறோம்) என்று கூறுகிறார். ஆனால் இதே ஜெயவர்த்தனா 1983-ஆம் ஆண்டு
      இனப்படுகொலை நடைபெற்றபொழுது, மக்களுக்கு விடுத்த அறிக்கையிலே அவர்
      பேசுகிறபொழுது சிங்கள மக்களை எண்ணித்தான் "எமது மக்கள் ஆபத்துக்கு உள்ளானால்
      நான் சும்மா இருக்க முடியுமா? எமது மக்கள் சும்மா இருப்பார்களா? என்று
      கேட்டார்.
      இவர்கள் ‘‘ஞன்ழ் டங்ர்ல்ப்ங்’’ எமது மக்கள் என்கின்றார்களே. அப்படியானால்
      ஏனைய மக்கள் யார்? அவர்கள் இலங்கைப் பிரஜைகள் அல்லவா? (பட்ங்ய் ஜ்ட்ர் ஹழ்ங்
      ற்ட்ங் ர்ற்ட்ங்ழ் ல்ங்ர்ல்ப்ங்?) இந்த உள்ளுணர்வு அவர்களுக்கு இருக்கின்றவரை
      அவர்கள் பேச்சுவார்த்தையிலே ஈடுபடுகிறோம் என்று சொல்வதை எந்த அளவிற்கு நாம்
      ஏற்றுக்கொள்ள முடியும். பிரேமதாசா இந்தியாவைப் பற்றி குறிப்பிடுகிறபொழுது,
      "எங்களுடைய எதிரிகளை அவர்கள் தொடர்ந்து ஆதரிப்பார்களானால் நாங்கள்
      வேறுபுறத்திற்குத் திரும்புவோம்' என்று சொல்கிறார். ஆகவே, அங்குள்ள தமிழ்
      மக்களை அங்குள்ள குடிமக்களாக அவர்கள் கருதவில்லை. அந்த நாட்டு மக்களாக
      எண்ணவில்லை. அவர்கள் உள்ளக்கிடக்கையை அவர்களாகவே ஆத்திரம் வந்தவுடன்
      வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அந்த உள்ளத்தில் தமிழ் மக்களை அந்நிய
      மக்களாகப் பகைவர்களாகக் கருதுகிறார்களே தவிர வேறு அல்ல.
      அப்படிக் கருதுகின்ற வரையிலும் எப்படி அந்த நாட்டிலே ஒற்றுமை வளரும்? எப்படி
      இறையாண்மை இருக்கும்? அதை நாம் போய் எப்படி உருவாக்க முடியும் என்பது
      நிச்சயமாக இந்த அரசுக்குத் தெரியவில்லை. அந்நாட்டுப் பிரதமர் பிரேமதாசா
      மேலும் கூறுகிறார். ""அரசியல் தீர்வுக்கு நாங்கள் தயார் இல்லை. அரசியல்
      தீர்வு வேண்டுமென்று எந்த நண்பராவது சொன்னால் அந்த நண்பர்தான் எங்களது மிகப்
      பெரிய எதிரி'' என்கிறார். அரசியல் தீர்வு என்று சொல்கின்றவர்கள் யாராக
      இருந்தாலும் அவர்கள் ரர்ழ்ள்ற் ங்ய்ங்ம்ஹ் அல்ல; ஊண்ழ்ள்ற் ங்ய்ங்ம்ஹ் அல்ல;
      க்ஷண்ஞ்ஞ்ங்ள்ற் ங்ய்ங்ம்ஹ் என்கிற உணர்வு வருகிறது என்றால் இந்திய அரசையும்,
      நம்மையும் பற்றி அவர்கள் எத்தகைய மனப் போக்கைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை
      நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
      ஆகவேதான் அங்கே இலங்கை மக்களின் சார்பிலே நடைபெறுகின்ற அரசினுடைய
      இர்ய்ற்ங்ய்ற் ஹய்க் இட்ஹழ்ஹஸ்ரீற்ங்ழ்அதைப் பொறுத்துத்தான்
      பேச்சுவார்த்தையுடைய தன்மைகள் அமையும். பேச்சுவார்த்தையே கூடாது என்பது நமது
      நோக்கம் அல்ல. ஆனால், இலங்கை அரசைப் பொறுத்தவரையில் பேச்சுவார்த்தையில்
      அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. பேச்சுவார்த்தையை அவர்கள் விரும்பவில்லை.
      பேச்சுவார்த்தையை அவர்கள் முகமூடியாகப் பயன்படுத்துகிறார்களே தவிர,
      உண்மையிலேயே அவர்கள் ராணுவத் தீர்விலேதான் மிகுந்த நம்பிக்கை வைத்து அதற்குத்
      திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என்பதுதான் நம்முடைய கணிப்பு, கருத்து.
      அதை முதல்வர் பாரதப் பிரதமரிடமும் இந்திய அரசிடமும் வாய்ப்புக்
      கிடைக்கும்போதெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் பாரதப்
      பிரதமரைச் சந்தித்து முதல்வர் கடிதம் கொடுத்தபோதும் தெளிவாகச் சொன்னார்கள்.
      பிரதமர் எடுத்த பல்வேறு முயற்சிகளைக் குறிப்பிட்டுக் காட்டிவிட்டு, நமது
      முதல்வர் கடிதத்தில் கூறுவதாவது:
      ""உங்களுடைய உண்மையான முயற்சிகளுக்கு மாறாக, இலங்கை அரசு அரசியல் தீர்வை
      விரும்பவில்லை. அதற்கு மாறாக ராணுவத் தீர்வுக்கு அவர்கள் சென்றுவிட்டார்கள்
      என்று நாங்கள் கருதுகிறோம் ஐய் ள்ல்ண்ற்ங் ர்ச் ஹ்ர்ன்ழ் ள்ண்ய்ஸ்ரீங்ழ்ங்
      ங்ச்ச்ர்ழ்ற்ள், ஜ்ங் ச்ங்ங்ப் ற்ட்ஹற் ஹப்ப் ர்ச் ஹ ள்ன்க்க்ங்ய்,ற்ட்ங்
      நழ்ண் கஹய்ந்ஹய் எர்ஸ்ங்ழ்ய்ம்ங்ய்ற் ட்ஹள் ள்ஜ்ண்ற்ஸ்ரீட்ங்க் ர்ஸ்ங்ழ் ற்ர்
      ம்ண்ப்ண்ற்ஹழ்ஹ் ர்ல்ற்ண்ர்ய் ண்ய்ள்ற்ங்ஹக் ர்ச் ஹழ்ழ்ண்ஸ்ண்ய்ஞ் ஹற் ஹ
      ல்ர்ப்ண்ற்ண்ஸ்ரீஹப் ள்ர்ப்ன்ற்ண்ர்ய்'' என்றார். அதோடு மட்டுமல்ல, சேலம்
      மாவட்டத்தில் சுற்றுப்பயணத்திலே இருந்தபோது நம்முடைய முதல்வர் பாரதப்
      பிரதமருக்கு அனுப்பிய தந்தியில் குறிப்பிட்டார்கள். 9-3-1987 அன்று கொடுத்த
      அந்தத் தந்தியில் எங்களுக்கு வருகின்ற தகவல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.
      இலங்கை அரசானது ராணுவத் தீர்வை நடத்துவதற்கு முடிவு எடுத்து விட்டது
      என்றுதான் நாங்கள் கருதுகிறோம்.‘‘பட்ங்ள்ங் ழ்ங்ல்ர்ழ்ற்ள் ர்ய்ப்ஹ்
      ஸ்ரீர்ய்ச்ண்ழ்ம் ர்ன்ழ் ச்ங்ஹழ் ற்ட்ஹற் ற்ட்ங் நழ்ண் கஹய்ந்ஹய்
      எர்ஸ்ங்ழ்ய்ம்ங்ய்ற் ட்ஹள் க்ங்ஸ்ரீண்க்ங்க் ற்ர் ச்ண்ய்க் ஹ ம்ண்ப்ண்ற்ஹழ்ஹ்
      ள்ர்ப்ன்ற்ண்ர்ய் ற்ர் ற்ட்ங் ங்ற்ட்ண்ய்ண்ஸ்ரீ ல்ழ்ர்க்ஷப்ங்ம் க்ஷஹ்
      ஹய்ய்ண்ட்ண்ப்ண்ஹற்ண்ய்ஞ் ற்ட்ங் பஹம்ண்ப்ள்.’’
      அதனைத் தொடர்ந்து முதல்வர் எழுதிய கடிதத்தில்,
      யாழ்ப்பாணம் பகுதியிலே இருக்கக் கூடிய அப்பாவி மக்கள் மீது இலங்கை அரசு முழு
      ராணுவத் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது என்பதையும் சொல்லியிருக்கிறார்கள்.
      மக்கள் மீது முப்படைகளையும் ஏவியிருக்கிறார்கள். ராணுவத்தின் மூலம் தாக்குதல்
      நடத்துகிறார்கள். விமானம் மூலம் குண்டு வீசுகிறார்கள். தமிழர்கள் தப்பித்து
      வெளியே செல்ல முடியாமல் கடல் வழியையும் தடை செய்கிறார்கள்.
      ""இலங்கை அரசியல் தீர்வுக்குப் போராடவில்லை. எங்கள் நாட்டின் ஒற்றுமையையும்
      இறையான்மையையும் பாதுகாக்கப் போராடுகிறோம். அமைதிக்குப் பிறகுதான்
      பேச்சுவார்த்தை'' என்று இலங்கைப் பிரதமர் பேசுகிறார். அமைதியை
      ஏற்படுத்தியபின்தான் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்றால் அமைதி
      எப்போது ஏற்படும்? நான் கேட்க விரும்புவதெல்லாம், இந்த அரசு கேட்பதெல்லாம்
      அமைதி என்றால் சுடுகாட்டு அமைதியா? என்பதுதான்.

No comments:

Post a Comment