Saturday, November 6, 2010

75 :மதுரையில் டெசோ மாநாடு!!

 தமிழீழ ஆதரவாளர் அமைப்பு (பஹம்ண்ப் உங்ப்ஹம் நன்ல்ல்ர்ழ்ற்ங்ழ்ள்
      ஞழ்ஞ்ஹய்ண்ள்ஹற்ண்ர்ய்) உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக திமுக தலைவர்
      மு.கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார். இவ்வமைப்பின் முக்கிய குறிக்கோள்கள்:
      * இலங்கையில் தமிழ் ஈழம் மலர ஆதரவு,
      * இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான உரிமையும் நிரந்தரப் பாதுகாப்பும்
      கிடைக்கும் வரை போராடுவது,
      * போராளிகளுக்கு அடைக்கலம் தரும் கடமையிலிருந்து தவறாமல் இருப்பது,
      * தமிழினத்தின் பாதுகாப்புக்காக எந்தவித தியாகத்துக்கும் தயாராக இருப்பது,
      * இந்தக் கடமைகளைச் செய்யும்போது மத்திய-மாநில அரசுகளின் அடக்குமுறைகளுக்கு
      ஆளாக நேர்ந்தாலும் அவற்றை இன்முகத்துடன் ஏற்பது - ஆகியனவாகும். இந்த 5
      உறுதிமொழிகளை "டெசோ' அமைப்பு சார்பில் நடத்தப்படும் பேரணி -
      பொதுக்கூட்டங்களில் திமுக தலைவர் மு.கருணாநிதி படித்து, மக்கள் ஏற்பதை
      நடைமுறைப்படுத்தியிருந்தனர். இந்த அமைப்பில் தி.மு.க., தி.க., தமிழ்நாடு
      காமராஜ் காங்கிரஸ், தமிழ்நாடு பார்வர்டு பிளாக் ஆகியவை அங்கம் வகித்தன.
      இக்கட்சிகள் தனித்தனியே ஈழப் பிரச்னைக்காக ஆதரவு தெரிவித்தாலும், உலக
      அரங்கில் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கில் இவ்வமைப்பு தனது பணிகளை
      மேற்கொண்டிருந்தது.
      மதுரையில் 4-5-1986 அன்று கூட்டப்பட்ட மாநாட்டில் தமிழகத் தலைவர்கள்
      மட்டுமன்றி, இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
      வாஜ்பாய் (பாஜக), என்.டி. ராமராவ், பி.உபேந்திரா (தெலுங்கு தேசம்),
      எச்.என்.பகுகுணா (லோக்தள்) பல்வந்த் சிங் ராமுவாலியா எம்.பி.(அகாலிதளம்),
      பி.உன்னிகிருஷ்ணன் எம்.பி. (காங்கிரஸ்-எஸ்), ராச்சையா (ஜனதாக்கட்சி), அப்துல்
      ரஷீத் எம்.பி.(காஷ்மீர் மாநில தேசிய மாநாட்டுக் கட்சி), ஜஸ்வந்த் சிங்
      எம்.பி., இந்துஸ்தான் முன்னணி சார்பாக சுப்பிரமணிய சாமி எம்.பி., அஸ்ஸôம்
      கணபரிஷத்தைச் சேர்ந்த தினேஷ்கோஸ்வாமி எம்.பி., க.அன்பழகன், கி.வீரமணி,
      ப.நெடுமாறன், அய்யணன் அம்பலம், தேவசகாயம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
      மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
      தவிர, தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, விடுதலைப் புலிகள், ஈரோஸ்,
      ஈபிஆர்எல்எஃப், பிளாட், புரோடெக் ஆகிய இலங்கைத் தமிழர் அமைப்பு பிரநிதிகளும்
      கலந்துகொண்டனர். மதியம் நடந்த கூட்ட அரங்கில் இலங்கைத் தமிழர்கள் இலங்கை
      நிலைமைகளை எடுத்துரைக்க, எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தீர்மான
      விவரங்களை விவாதித்து முடிவுக்கு வந்தனர். சுமார் நாலரை மணி நேரம் இந்தக்
      கூட்டம் நடைபெற்றது. தீர்மான விவரங்களை திமுக தலைவர் மு.கருணாநிதி
வாசித்தார்:
      * இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசு தனது அலட்சியப் போக்கை கைவிட வேண்டும்
      என்றும், மத்தியஸ்தர் நிலையிலிருந்து இந்தப் பிரச்னையை அணுகாமல் இலங்கைத்
      தமிழர்களோடு நேரடியாகவும் நெருக்கமாகவும் தொடர்புள்ள நாடு எனும் அடிப்படையில்
      அணுகி, இந்தப் பிரச்னையைத் தீர்த்து வைக்க வாய்ப்புள்ள அனைத்து வழிகளிலும்
      முயலும் வண்ணம் தனது கொள்கையை மறுபரிசீலனை செய்து தமிழ் மக்கள்
      சமத்துவத்தோடும், பாதுகாப்போடும் கண்ணியத்தோடும் வாழ வழிசெய்ய வேண்டும்
      என்றும் இந்திய அரசை வலியுறுத்தி இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.
      * மனித குலத்திற்கு எதிரான இனப் படுகொலைச் செயலில் ஈடுபட்டு தமிழர்களை
      அழிப்பதற்கு தனக்குக் கிடைக்கும் நிதியுதவிகளை இலங்கை அரசாங்கம்
      பயன்படுத்தும். ஆதலால் இலங்கைக்கு எத்தகு நிதியுதவிகளையும் அளிக்க வேண்டாம்
      என்று நிதியுதவி அளிக்கும் நாடுகளையும் சர்வதேச நிதியுதவி நிறுவனங்களையும்
      இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.
      * இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் திட்டமிட்ட இனப் படுகொலைச் செயல்கள்
      அதனுடைய பொய்யான தகவல்களையும் மாறுபாடான செய்திகளையும் மீறி, உலகத்தின்
      நாகரிக மக்களின் கண்முன்னால் அப்பட்டமாகத் தெரியத் தொடங்கி விட்டன. ஆகவே,
      இந்தப் பிரச்னையை உலக அமைப்புகளான ஐ.நா. மன்றம், காமன்வெல்த் மாநாடு, அணிசேரா
      நாடுகள் அமைப்பு ஆகியவனவற்றில் மிகத் தீவிரமாக எழுப்பி, தீர்வு காணுமாறு
      இந்திய அரசாங்கத்தை இந்த மாநாடு வற்புறுத்துகிறது.
      மாநாட்டின் துவக்க உரையில், அந்த நாடுகளிடம் சொல்ல வேண்டும் என்று இந்திய
      அரசிடம் நாம் கேட்டுக் கொள்ளவில்லை. அந்த நாடுகளிடமே நேரடியாக கேட்கத்
      தொடங்கி விட்டோம். அந்த நிறுவனங்களையே நேரடியாக கேட்கத் தொடங்கிவிட்டோம்.
      அதையும் மீறி இலங்கையிலே படுகொலை தொடர நிதியை வழங்கி, அதைப் பயன்படுத்தி
      இலங்கை அரசுக்கு, அதன் கொலை வாளுக்கு உடந்தையாக இருக்க முனையுமேயானால், அந்த
      நாடுகள் எங்கள் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்றும் - இந்தியத் துணைக்
      கண்டத்தில் இருக்கின்ற அத்துணை மக்களின் அதிருப்தியையும் அவர்கள் சந்திக்க
      வேண்டியிருக்கும்-என்றும் மு.கருணாநிதி தெரிவித்தார்.
      அவர் தனது வரவேற்புரையில், "தமிழ்நாட்டு அளவிலேதான் இந்தப் பிரச்னை
      பேசப்படுகிறது என்று சொல்பவர்களின் வாயை அடைப்பதற்காக இந்திய அளவில் இந்தப்
      பிரச்னை பேசப்படுகிறது என்பதைக் காட்டுவதற்காக - இது மேலும் மேலும் வளரும்
      என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான் இந்த மாநாட்டில் என்.டி. ராமராவ்
      தமிழில்தான் பேசினார்.
      தமிழர்களை மட்டுமே பாதிப்பதால் இப் பிரச்னையில் இந்தியாவின் பிற பகுதிகளில்
      உள்ளோர் முக்கியத்துவம் தருவதில்லை - கவனம் செலுத்துவதில்லை என்ற எண்ணம்
      மேலோங்கி வருகிறது... இப்பிரச்னையில் தமிழர்கள் மாத்திரமல்ல, இந்திய நாடே
      இலங்கைவாழ் தமிழர்களின் கவலையைப் பகிர்ந்து கொள்கிறது. எனவே, நீங்கள்
      பங்கேற்றுக் கொண்டது தேசிய ஒருமைப்பாட்டினை வலுப்படுத்தவும் பயன்படும்
      என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.
      கடந்த ஆண்டு ஜெனிவாவில் கூடிய ஐ.நா. சபையின் மனித உரிமைக் குழுவில் இப்
      பிரச்னையை அர்ஜென்டினா எழுப்பிட முனைந்தபோது பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறி
      இந்தியா அதனைத் தடுத்துவிட்டது. கடைசியாக அரைகுறை மனதுடன் இந்த ஆண்டு (1986)
      ஜெனிவாவில் இந்தியா பிரச்னையை எழுப்பியதே தவிர, இதுகுறித்து பிறநாடுகளோடு
      பேசி விளக்கிட எந்த முயற்சியும் எடுக்காததால் உரிய பலன் எதுவும்
      கிட்டவில்லை...
      1983 ஜூலையிலிருந்து இலங்கை காவல் துறையும் ராணுவமும் அப்பாவித் தமிழர்களைக்
      கொன்று குவித்து வருகின்றன. ராணுவத் தீர்வு காணப் போவதாக பிப்ரவரி மாதம்
      ஜெயவர்த்தனா பிரகடனம் செய்தார். அதை நிறைவேற்றும் வகையில் தமிழர்கள்
      வசிக்கும் பகுதிகள் மீது விமானத் தாக்குதல்களுக்கு ஆணையிட்டார்.
      "பாதுகாப்புப் பிரதேசங்கள்' என்று வரையறுத்துக் கொண்டு ராணுவம் தமிழர்களை
      அழிக்கத் தொடங்கியது. ஆகாய மார்க்கத்திலும், கடல் மார்க்கத்திலும், தரை
      மார்க்கத்திலும் முப்படைகளும் தாக்குதல் நடத்தி தமிழர்களைக் கொன்று -
      சொத்துக்களைச் சூறையாடியது...
      இலங்கைப் பிரச்னை குறித்து இந்திய அரசுக்கு ஒரு திட்டவட்டமான கொள்கை
      கிடையாது. ஏனோதானோ என்ற இந்தப் போக்கினால் பயங்கரமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
      ஜெயவர்த்தனா விரித்த வலையில் இந்தியா விழுந்ததன் விளைவு - அந்நியச்
      சக்திகளைப் பயன்படுத்த அவருக்கு மேலும் வாய்ப்பு ஏற்பட்டது. தற்போது இலங்கை
      ராணுவம் பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வர அனுப்பப்படுகிறது - பாகிஸ்தான்
      மட்டுமல்ல இஸ்ரேலிய மொசாத்தும், பிரிட்டனின் எஸ்.எ.எஸ். படையினரும் -
      தென்னாப்பிரிக்கா ஒற்றர் படையினரும் மற்றும் அதிரடி குண்டர் படையினரும்
      இலங்கை அரசுக்கு துணை நிற்கும் நிலை...
      இலங்கை மனப்பூர்வமாகவோ, நேர்மையாகவோ பேச்சுவார்த்தையில் ஈடுபடாத வரையில் எந்த
      மட்டத்தில் பேச்சுக்கள் நடத்தப்பட்டாலும் அதில் ஒரு பலனும் ஏற்படப்
      போவதில்லை. ஏமாற்றுக் கலையில் வல்லமை மிக்க ஜெயவர்த்தனா இந்தியத் தூதுக்
      குழுவை வரவேற்பதில் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஏனெனில் ஒவ்வொரு
      ஆண்டும் "சர்வதேச நிதி உதவி ஸ்தாபனம்' கூட்டம் நடைபெறும் நேரத்தில் தனக்கு
      நிதியுதவியைப் பெறுவதற்காக இலங்கை இனப் பிரச்னையில் அரசியல் தீர்வு காண தீவிர
      முயற்சி எடுப்பதாகக் காட்டிக்கொள்ள இலங்கைக்கு ஓர் "அலிபி' தேவை. இந்த ஆண்டு
      அந்த "அலிபி' நாடகத்தை இந்தியாவே நடத்திவிட்டது. இந்தப் பெரும் உதவி செய்த
      ராஜீவ் காந்திக்கு ஜெயவர்த்தனா நன்றியுள்ளவராக இருப்பார்... என்றும்
      மு.கருணாநிதி குறிப்பிட்டார்.
      பத்திரிகையாளர்களிடையே அவர் பேசுகையில், இவ்வகையான மாநாடு முதல் தடவையாக
      நடைபெறுகிறது. தமிழர் பிரச்னைகளை விளக்குவதற்காக இந்தியாவின் பிற
      மாநிலங்களிலும் மாநாடு நடத்தப்படும். அடுத்த மாநாடு ஆந்திரப் பிரதேசத்திலும்
      - புது தில்லியிலிலும் நடத்தப்படும்! என்றும் மு.கருணாநிதி தெரிவித்தார்.
      மாநாட்டின்போது இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் - டெலோவுக்கும் மோதல்
      ஏற்பட்டுள்ளதாகத் தகவல் கசியவும், ஸ்ரீசபாவுக்கு ஆபத்து எதுவும் வந்துவிடக்
      கூடாது என்றும், சகோதர யுத்தம் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அனைத்துக்
      குழுக்களும் ஒருங்கிணைந்து தமிழர் பிரச்னையில் செயல்பட வேண்டும் எனவும்
      என்.டி.ஆர்., வாஜ்பாய் போன்றோர் கேட்டுக்கொண்டதற்கிணங்க டெசோவின் தலைவர்
      மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.
      இலங்கைத் தமிழர் பிரதிநிதிகளுடன் "தாங்கள் ஒற்றுமையாகச் செயல்படுவதையொட்டி
      உறுதி அளிக்கவேண்டும்' என்றும் கேட்டதற்கு, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக
      அ.அமிர்தலிங்கம், எல்டிடிஈ சார்பாக திலகர், டெலோ சார்பாக மதி, புரோடெக்
      சார்பாக சந்திரகாசன், ஈரோஸ் சார்பாக இரத்தினசபாபதி, டிஇஎல்எம் சார்பாக
      ஈழவேந்தன், ஈபிஆர்எல்எப் சார்பாக வரதராஜபெருமாள், பிளாட் சார்பாக வாசுதேவா
      ஆகியோர் "இனி ஒன்றுபட்டு செயல்படுவதாக' உறுதியளித்தார்கள்.

No comments:

Post a Comment