சிங்கள பேரினவாதத்தை வீழ்த்த வேண்டும் என்றால் இயக்கங்கள் ஒன்றாக இணைய
வேண்டியது அவசியம் என்ற கருத்து ஈழத்தில் மட்டுமல்ல - தமிழ்நாட்டில்
மட்டுமல்ல - உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் விருப்பமாக இருந்தது. இதன்
அடிப்படையில் ஏற்பட்ட ஐக்கியம்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியாக (14.5.1972)
மலர்ந்தது.
அதேபோன்று ஆயுதப் போராளிகளின் அமைப்புகள் 37 என்பது இலங்கை அரசின் கணிப்பு.
அதிலும் முன்னிலையில் இருப்பது எல்.டி.டி.ஈ., டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்.,
ஈரோஸ், பிளாட் ஆகிய அமைப்புகள்தான். இவ்வமைப்புகள் ஒன்றிணைய வேண்டும் என்று
பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. "அருளர்' என அழைக்கப்படும் அருட்பிரகாசம்
அனைத்து இயக்கங்களையும் ஒன்றிணைக்க பலகட்ட பேச்சுவார்த்தைகளை இயக்கங்களிடையே
நடத்தினார். தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அ. அமிர்தலிங்கமும் முயன்றார்.
ஆனால் கூடிக் கலைவது என்பதே தொடர்ந்தது. பத்மநாபாவின் முயற்சியால் ஈழ தேசிய
முன்னணி (உங்ப்ஹம் சஹற்ண்ர்ய்ஹப் ஊழ்ர்ய்ற்-உசஊ) உருவாக்கப்பட்டது. இதில்
ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப். டெலோ இயக்கங்கள் அங்கம் வகித்தன. விடுதலைப்
புலிகள் தலைவர் பிரபாகரன் இதில் இணையாமல் இருந்தார். அதனால் இம்முயற்சியை
விடுதலைப் புலிகள் அமைப்புத் தலைவர் பிரபாகரன் விரும்பவில்லை என்ற கருத்து
பரவலாக எழுந்தது. இந்நிலையில் இந்நிகழ்வை அறிவது அவசியம். "1981-இல், புலிகள்
இயக்கம் கலைக்கப்பட்டு தங்கதுரை, குட்டிமணி ஆகியோருடன் இணைந்து செயல்பட
பிரபாகரன் முடிவெடுத்தார். 1981-இல், நீர்வேலி வங்கிக் கொள்ளையில், "டெலோ'
இயக்கம் ஈடுபட்டு வெற்றியடைந்தது. இதன் காரணமாக போலீஸ் கெடுபிடி கடுமையானதும்
தங்கதுரை, குட்டிமணி ஆகியோர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லும் வழியில்
சிங்களப் போலீஸôரிடம் பிடிபட்டார்கள். பிரபாகரனும் மற்றவர்களும் தப்பித்தனர்.
தங்கதுரை, குட்டிமணி ஆகியோருக்கும் பிரபாகரனுக்குமிடையே இருந்த நல்லுறவு,
அவர்கள் சிறைப்பட்ட பிறகு மற்றவர்களிடம் இருக்கவில்லை. தங்கதுரை, குட்டிமணி
ஆகியோரை சிறையிலிருந்து தப்புவிக்க பிரபாகரன் வகுத்த திட்டத்தைச்
செயல்படுத்துவதில் "டெலோ' இயக்கத்தைச் சேர்ந்த மற்றவர்கள் தயக்கம்
காட்டினார்கள். எனவே பிரபாகரனும் அவரது தோழர்களும் 1981-ஆம் ஆண்டின்
இறுதியில் "டெலோ'விலிருந்து பிரிந்தார்கள். டெலோவிலிருந்தபோது சிங்களப்
போலீஸôரிடமிருந்து பறிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பணத்தை டெலோவிடமே
பிரபாகரன் ஒப்படைத்தார். (பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் (1988)--பழ.
நெடுமாறன்)
மேற்கண்ட சம்பவம் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறது. ஆயுதப் போராட்டக்
குழுக்கள் ஒன்றிணைவது என்பதில் பிரபாகரனுக்குக் கருத்து வேறுபாடுகள்
இருந்தாலும் அப்படிப்பட்ட முயற்சிகளுக்கு அவர் தடையாக இருக்க விரும்பவில்லை
என்பதுதான் உண்மை. 1984-ஆம் ஆண்டில் டாக்டர் பஞ்சாட்சாரம் நியூயார்க்கில்
உலகத் தமிழ் மாநாடு ஒன்றினைக் கூட்டினார். அதன் நோக்கம் இலங்கை போராளி
இயக்கங்களை ஒன்றிணைப்பதுதான். டாக்டர் பஞ்சாட்சாரத்தின் முயற்சிக்கு வாழ்த்து
தெரிவித்து பிரபாகரன் எழுதிய கடிதத்தில்,
""விடுதலை இயக்கங்களை ஒன்றிணைத்து தேசிய அரசியல் ராணுவத் தலைமையை
உருவாக்குவது மாநாட்டின் நோக்கங்களில் ஒன்று என்பதாகத் தெரிகிறது. இவ்வித
ஒற்றுமை முயற்சிகள் தமிழீழத்தில் மேற்கொள்ளப்படுவதையே விரும்புகிறேன்'' என்று
குறிப்பிட்டிருந்தார். பிரபாகரன் அக்கடிதத்தில் தெரிவித்திருந்த இன்னொரு
கருத்து, ""தமிழ்நாட்டிலோ, வெளிநாடுகளிலோ இருந்து கொண்டு ஒற்றுமையைப் பற்றிப்
பேசாமல் நேரடியாகக் களத்திற்கு வந்து ஒன்றுபட்டுப் போராடுவதற்கு சகல
குழுக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்'' என்பதாகும்.
அதுமட்டுமின்றி, ""ஒற்றுமைக்கு நல்லெண்ணச் சூழல் அவசியம். ஒருவரையொருவர்
விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். நம்மிடையே உள்ள வெறுப்புணர்வைக் களைய
வேண்டும். சொல் அளவில் இல்லாமல் சகோதர விரோத யுத்தம் நடத்துவதை நிறுத்த
வேண்டும். ஆகவே சகல புரட்சிகர விடுதலை அமைப்புகளுக்கும் நான் விடுக்கும்
வேண்டுகோள், போர்க்களத்தில் குதியுங்கள். நமது பொது எதிரியை ஒன்றிணைந்து
எதிர்ப்போம். அப்போது முழு தேசமுமே நமக்கு பக்கபலமாக நிற்கும். (பிரபாகரன்
தமிழர் எழுச்சியின் வடிவம்--பழ. நெடுமாறன்) இக்கடிதம் நியூயார்க் மாநாட்டில்
வாசிக்கப்பட்டதும் பத்திரிகைகளிலும் அக்கருத்து வெளியாகி நல்ல பலனைத் தந்தது.
1985-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி தமிழீழ இயக்கத் தலைவர் வே. பிரபாகரன்,
தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் (டெலோ) சிறி சபாரத்தினம், ஈழ மக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எஃப்.) தலைவர் கா. பத்மநாபா, ஈழப்புரட்சி
அமைப்பு (ஈரோஸ்) தலைவர் வே. பாலகுமார் ஆகியோர் ஒன்று கூடி ஓர் அறிக்கையினை
வெளியிட்டனர்.
"தமிழீழப் போராட்டத்தில் புதிய திருப்பம்! விடுதலை அமைப்புகள் ஒன்றுபட்டன!!'
என்று தலைப்பிட்ட அவ்வறிக்கையில், ஈழத் தமிழ் பேசும் மக்களின் தேசிய
சுதந்திரப் போராட்டத்தை நடத்துவதில் ஒன்றுபட்டுச் செயல்பட ஈழத் தேசிய விடுதலை
முன்னணியும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் முடிவு செய்துள்ளன என்று
தெளிவாக்கப்பட்டிருந்தது. 1984-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்ட ஈழத்
தேசிய விடுதலை முன்னணி, விடுதலைப்புலிகள் தவிர மூன்று முக்கிய விடுதலை
அணிகளின் கூட்டமைப்பாகும். தமிழீழ விடுதலை இயக்கம் (பஉகஞ) ஈழப் புரட்சி
அமைப்பு (உதஞந) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (உடதகஊ) ஆகியவை
இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
புரட்சிகர ஆயுதப் போராட்டப் பாதையைத் தழுவிக் களத்தில் போராடும் இந்த நான்கு
விடுதலை இயக்கங்கள் மத்தியில் ஒருமைப்பாடு ஏற்பட்டது தமிழ் ஈழ விடுதலைப்
போராட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும்.
ஈழத்தமிழரின் சுதந்திரப் போரில் ஒரு திருப்புமுனையாக அமைந்த இந்நிகழ்ச்சி
புரட்சிகர சக்திகளை ஒன்றிணைத்து ஆயுதப் போராட்டத்தை ஒருமுகப்படுத்தி
வலுப்படுத்த வழிகோலியது' என்று குறிப்பிட்ட அறிக்கை, இக்குழுக்களின்
ஒன்றிணைப்பான அணிக்கு ஈழத் தேசிய விடுதலை முன்னணி (உங்ப்ஹம் சஹற்ண்ர்ய்ஹப்
கண்க்ஷங்ழ்ஹற்ண்ர்ய் ஊழ்ர்ய்ற் -உசகஊ) என்று பெயரிட்டுக் கொண்டதோடு,
கீழ்க்காணும் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றுபட்டுச் செயல்படுவது எனவும்
தீர்மானித்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அவை வருமாறு:-
1. ஸ்ரீலங்கா ஆதிக்கத்திலிருந்தும், அடக்குமுறையிலிருந்தும் எமது தாயகத்தின்
சுதந்திரத்தையும் இறையாண்மையையும் வென்றெடுத்தல்.
2. இலங்கைவாழ் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுகின்ற
தனியரசைத் தவிர்த்த வேறெந்த குறைந்தபட்ச சமரசத் திட்டத்தையும்
அங்கீகரிப்பதில்லை.
3. பரந்துபட்ட மக்களின் பங்களிப்போடு பரிணாமம் பெறும் வெகுஜன ஆயுதப்
போராட்டத்தை (மக்கள் போராட்டத்தை) எமது போராட்டப் பாதையாகக் கொள்ளுதல்.
4. தேசிய சுதந்திரப் போராட்டத்தோடு, சோஷலிசப் புரட்சியையும் முன்னெடுத்து,
சுதந்திரத் தமிழ்நாட்டில் சோஷலிச சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல்.
5. உலக ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து எமது தேசத்தைப் பூரணமாக விடுவித்து,
அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடித்தல்.
""தற்போது ஒப்புக் கொள்ளப்பட்ட குறைந்தபட்ச வேலைத் திட்டத்தின் அடிப்படையில்
முக்கிய அரசியல் பிரச்னை குறித்து ஒன்று கூடிக் கலந்தாலோசித்து முடிவெடுப்பது
என்றும், ஸ்ரீலங்கா அரசுப் படைகளுக்கெதிரான எமது ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை
ஒன்றுபடுத்திச் செயற்படுத்துவதெனவும் தீர்மானித்துள்ளோம்.
எமது இந்த ஒருமைப்பாடு விரிவுபட்டு வலுப்பெற ஒத்துழைப்பும் ஆதரவும் தருமாறு
எமது மக்களின் விடுதலையில் அபிமானம் கொண்ட சகல தமிழ் மக்களையும் வேண்டிக்
கொள்கிறோம்''--இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
"இயக்கங்களுக்கிடையே ஐக்கியம் ஏற்பட்டதும் சிங்கள அரசு மிகவும் பயந்துபோனது.
1986-ஆம் ஆண்டு, ஜூலை 28-ஆம் தேதி, ஈ.பி.ஆர்.எல்.எஃப்.-ம், எல்.டி.டி.ஈ.-யும்
இணைந்து யாழ்ப்பாண கோட்டை மீது தாக்குதல் தொடுத்தது. இத்தாக்குதலில் லெப்.
கர்னல் விக்கிரம நாயக்காவும், செனிவரட்னாவும் கொல்லப்பட்டு, கர்னல் கப்பு
ஆராய்ச்சியும் கேப்டன் ஜெயவர்த்தனாவும் வேறு ஒருவரும் படுகாயம் அடைந்தனர்.
இவை தவிர எவ்வளவோ பட்டியல் போட முடியாத தாக்குதல்களையும் இந்த ஒன்றிணைப்பு
அணி நடத்தியது. (ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்--புஷ்பராஜா)
உலகத் தமிழர்கள் மத்தியிலும் இந்த இணைப்பு முயற்சி நல்லதொரு நிறைவை அளித்தது.
No comments:
Post a Comment